குக்கீ கொள்கை

டின்டெரில், உங்களைப் பற்றிய டேட்டாவை நாங்கள் எவ்வாறு சேகரித்து செயலாக்குகிறோம் என்பதில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். குக்கீஸ் தொடர்பான எங்களின் நடைமுறைகளைப் பற்றி உங்களுக்கு தெரிவிக்கவும், அவற்றை நீங்கள் எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பதை உங்களுக்கு விளக்குவதற்கு இந்தப் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குக்கீகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உங்களுக்கு ஏற்கனவே தெரியும், மேலும் உங்கள் அமைப்புகளை சரி செய்ய வேண்டுமா?

எந்தப் பிரச்சனையும் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை. உங்கள் இணையதள குக்கீஸ் அமைப்புகளைப் புதுப்பிக்க டின்டெரில் உள்ள ப்ரொஃபைல் அமைப்புகளுக்குச் செல்லவும் மேலும் உங்கள் தனியுரிமை விருப்பங்களைச் சரி செய்ய உங்கள் செயலியில் உள்ள கணக்கு அமைப்புகளுக்குச் செல்லவும்.

குக்கீஸ் மற்றும் அவற்றை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?

விளக்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி! தொடர்ந்து படிக்கவும்.

குறிப்பு: எங்கள் குக்கீஸ் பயன்பாட்டிற்கு வெளியே உள்ள உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம் என்பதை இந்த குக்கீ கொள்கை குறிப்பிடவில்லை. உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம் என்பதைப் பற்றி மேலும் அறிய, எங்கள் தனியுரிமைக் கொள்கையை படிக்கவும்.

குக்கீஸ் என்றால் என்ன?

உங்கள் வெப் பிரவுசர் அல்லது உங்கள் டிவைசின் மெமரிக்கு அனுப்பப்படும் அல்லது அணுகப்படும் சிறு டெக்ஸ்ட் ஃபயில்ஸ் குக்கீஸ் ஆகும். ஒரு குக்கீயானது அந்த குக்கீ உருவான டொமைனின் பெயர் (இணைய இருப்பிடம்), குக்கீயின் "வாழ்நாள்" (அதாவது, அது காலாவதி ஆகும் நேரம்) மற்றும் தோராயமாக உருவாக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட எண் அல்லது ஒத்த அடையாளங்காட்டி ஆகிவற்றைக் கொண்டிருக்கும். பயனர் அமைப்புகள், பிரவுசிங் ஹிஸ்டரி மற்றும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது நடத்தப்படும் செயல்பாடுகள் போன்ற உங்கள் டிவைஸ் பற்றிய தகவல்களும் ஒரு குக்கீயில் இருக்கலாம்.

பல்வேறு வகையான குக்கீஸ் உள்ளதா?

முதல் தரப்பு மற்றும் மூன்றாம் தரப்பு குக்கீஸ்

முதல் தரப்பு குக்கீஸ் மற்றும் மூன்றாம் தரப்பு குக்கீஸ் உள்ளன. உங்கள் டிவைஸில் முதல் தரப்பு குக்கீஸ் எங்களால் நேரடியாக வைக்கப்படுகின்றன. உதாரணமாக, உங்கள் பிரவுசரின் மொழி விருப்பங்களுக்கு ஏற்ப எங்கள் வலைத்தளத்தை மாற்றி அமைக்கவும் மற்றும் எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பயன்பாட்டை நன்கு புரிந்து கொள்ளவும் நாங்கள் முதல் தரப்பு குக்கீகளை பயன்படுத்துகிறோம். உங்கள் டிவைஸில் எங்களது கூட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களால் மூன்றாம் தரப்பு குக்கீஸ் வைக்கப்படுகின்றன. இந்த கூட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களைப் பற்றி எங்கள் இணையதளம் மற்றும் ஆப் சார்ந்த ஒப்புதல் மேலாண்மை கருவிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த கருவிகள் பற்றிய விவரங்களுக்கு, "நீங்கள் எவ்வாறு குக்கீகளை கட்டுப்படுத்துவது?" என்பதைக் கீழே பார்க்கவும்.

குறிப்பிட்ட காலப்பகுதி மற்றும் நிலையான குக்கீஸ்

குறிப்பிட்ட காலப்பகுதி மற்றும் நிலையான குக்கீஸ் உள்ளன. உங்கள் பிரவுசரை மூடும் வரை மட்டுமே குறிப்பிட்ட காலப்பகுதி குக்கீஸ் நீடிக்கும். ஒரே ஒரு பிரவுசர் காலப்பகுதியின் போது எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பயன்பாட்டைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் மற்றும் எங்கள் வலைத்தளத்தை மிகவும் சிறந்த முறையில் பயன்படுத்த உங்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக காலப்பகுதி குக்கீஸ்-ஐப் பயன்படுத்துகிறோம். நிலையான குக்கீஸ் நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் தற்போதைய காலப்பகுதிக்கு அப்பால் நீடிக்கும். கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி பகுப்பாய்வு நோக்கங்களுக்காகவும் பிற காரணங்களுக்காகவும் எங்கள் இணையதளத்தில் விரைவாக மீண்டும் உள்நுழைய உங்களுக்கு உதவுவதற்கும் இந்த வகையான குக்கீஸ் பயன்படுத்தப்படலாம்.

இணைய பீகன்ஸ் மற்றும் எஸ்.டி.கே-க்கள் போன்ற பிற கண்காணிப்பு தொழில்நுட்பங்களைப் பற்றி என்ன?

இணைய பீகன்ஸ் (பிக்சல், குறிச்சொற்கள் அல்லது தெளிவான கிஃப்ஸ்), கண்காணிப்பு URLகள் அல்லது மென்பொருள் மேம்பாடு கருவிகள் (எஸ்.டி.கே-க்கள்) குக்கீஸ்-ஐப் போன்ற ஒரே மாதிரி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. யாரேனும் எங்கள் சேவையைப் பார்வையிடும்போது அல்லது நாங்கள் அவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலைத் திறக்கும்போது அடையாளம் காண உதவும் ஒரு தனித்துவமான அடையாளங்காடியைக் கொண்டுள்ள சிறு கிராபிக்ஸ் ஃபயில் இணைய பீகன்ஸ் ஆகும். எங்கள் வலைப்பக்கங்களுக்கான ட்ராஃபிக் எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் தனிப்பயனாக்கப்பட்ட இணைப்புகள் தான் கண்காணிப்பு URLகள். எஸ்.டி.கே-க்கள் என்பது குக்கீஸ் மற்றும் இணைய பீகன்ஸ் போன்று செயல்படும் ஆப்களில் சேர்க்கப்பட்டுள்ள சிறு குறியீடுகளாகும்.

எளிமைக்காக, இந்த தொழில்நுட்பங்களை இந்த குக்கீ கொள்கையில் "குக்கீஸ்" என்று குறிப்பிடுகிறோம்.

குக்கீகளை எதற்காகப் பயன்படுத்துகிறோம்?

பிற ஆன்லைன் சேவை வழங்குநர்களைப் போலவே, நாங்கள் எங்கள் சேவை வழங்குவதற்கும், பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், உங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கும், எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடும்போது உங்களை அடையாளம் காணவும், எங்களின் மார்க்கெட்டிங் பிரச்சாரங்களின் வெற்றியை அளவிடுவதற்கும் மற்றும் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப விளம்பரங்களைத் தனிப்பயனாக்குதல் மற்றும் வழங்குதல் ஆகியவற்றிற்கும் நாங்கள் குக்கீகளை பயன்படுத்துகிறோம். இந்த நோக்கங்களை நிறைவேற்ற, நாங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கும் பிற தனிப்பட்ட தகவலுடன் குக்கீஸின் தகவலையும் நாங்கள் இணைக்கலாம்.

எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்கள் டிவைஸில் பின்வரும் சில அல்லது அனைத்து வகையான குக்கீஸ் அமைக்கப்படலாம்.

குக்கி வகை

விளக்கம்

அத்தியாவசிய குக்கீஸ்

உங்களை உள்நுழைய உதவுதல், உங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்ளுதல் மற்றும் தீங்கிழைக்கும் செயல்பாட்டைக் கண்டறிந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது போன்ற எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்க இந்தக் குக்கீஸ் கண்டிப்பாக அவசியம்.

பகுப்பாய்வு குக்கீஸ்

எங்கள் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும், உங்களுக்காக எங்கள் சேவைகளைத் தனிப்பயனாக்கவும் மேம்படுத்தவும் எங்களுக்கு இந்த குக்கீஸ் உதவுகின்றன.

விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் குக்கீஸ்

எங்கள் மார்க்கெட்டிங் பிரச்சாரங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கவும், மேலும் விளம்பரங்களை உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்றவும் இந்த குக்கீஸ் பயன்படுகிறது. எங்கள் மார்க்கெட்டிங் பிரச்சாரங்கள் எங்கள் சேவைகளில் எவ்வளவு டிராஃபிக்கை ஏற்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுதல், அதே விளம்பரம் தொடர்ந்து மீண்டும் தோன்றுவதைத் தடுப்பது, விளம்பரதாரர்களுக்கு விளம்பரங்கள் சரியாகக் காட்டப்படுவதை உறுதி செய்தல், உங்களுக்குத் தொடர்புடைய விளம்பரங்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் காட்டப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் செயல்திறனை அளவிடுதல், கொடுக்கப்பட்ட விளம்பரத்துடன் எத்தனை பேர் தொடர்பு கொண்டனர் என்பது போன்ற செயல்பாடுகள் அவை நடத்துகிறது.

சோஷியல் நெட்வர்கிங் குக்கீஸ்

மூன்றாம் தரப்பு சோஷியல் நெட்வர்கிங் மற்றும் பிற இணையதளங்கள் அல்லது சேவைகள் மூலம் எங்கள் சேவைகளில் நீங்கள் ஆர்வமாகக் காணும் பக்கங்களையும் உள்ளடக்கத்தையும் பகிர்வதற்கு இந்த குக்கீஸ் பயன்படுத்தப்படுகின்றன. விளம்பர நோக்கங்களுக்காகவும் இந்த குக்கீஸ் பயன்படுத்தப்படலாம்.

குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

உங்களுக்குப் பல குக்கீ மேலாண்மை விருப்பங்கள் உள்ளன. உங்கள் குக்கீ விருப்பத்தேர்வுகளில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதில் குறைந்த திருப்திகரமான அனுபவமாக இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும், ஏனெனில் அவை உங்களுக்கு முழுமையாக தனிப்பயனாக்கப்படாமல் இருக்கலாம். சில சமயங்களில், எங்கள் சேவைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ உங்களால் பயன்படுத்த முடியாமல் போகலாம்.

நாங்கள் வழங்கும் கருவிகள்

எங்கள் இணையதளத்தில் கிடைக்கும் கருவியைப் பயன்படுத்தி உங்கள் குக்கீஸ் விருப்பத்தேர்வுகளை எந்த நேரத்திலும் அமைத்து சரி செய்யலாம், மேலும் உங்கள் ஆப்-இல் உள்ள உங்கள் கணக்கு அமைப்புகளுக்குச் சென்றும் உங்கள் ஆப் குக்கீ விருப்பத்தேர்வுகளை அமைத்தும் சரிசெய்யலாம்.

பிரவுசர் மற்றும் டிவைசஸ்களின் கட்டுப்பாடுகள்

சில இணைய பிரவுசர்கள் குக்கீஸ்-ஐக் கட்டுப்படுத்த அல்லது நிராகரிக்க அல்லது உங்கள் கணினியில் குக்கீ வைக்கப்படும் போது உங்களை எச்சரிக்க அனுமதிக்கும் அமைப்புகளை வழங்குகின்றன. ஒவ்வொரு இணைய பிரவுசருக்கும் குக்கீஸ்-ஐ நிர்வகிப்பதற்கான செயல்முறை சற்று வேறுபடும். உங்கள் குறிப்பிட்ட பிரவுசர் உதவி மெனுவில் குறிப்பிட்ட படிகளைச் சரி பார்க்கலாம்.

உங்கள் மொபைலில் பொருத்தமான அமைப்பைப் பயன்படுத்தி, டிவைஸ் அடையாளங்காட்டிகளை ரீசெட் செய்யலாம் அல்லது அடையாளங்காட்டிகளைச் சேகரித்து அல்லது செயலாக்குவதில் இருந்து விலகலாம். அடையாளங்காட்டிகளை நிர்வகிப்பதற்கான நடைமுறைகள் ஒவ்வொரு டிவைஸிற்கும் சற்று வேறுபட்டு இருக்கும். உங்களது குறிப்பிட்ட டிவைஸின் உதவி அல்லது அமைப்புகள் மெனுவில் குறிப்பிட்ட படிகளைச் சரி பார்க்கலாம்.

ஆர்வம் சார்ந்த விளம்பர கருவிகள்

விளம்பர நிறுவனங்கள் சுய ஒழுங்குமுறை திட்டங்களில் பங்கேற்கலாம், அவை சம்பந்தப்பட்ட ஆர்வ அடிப்படையிலான விளம்பரங்களில் இருந்து விலக உங்களை அனுமதிக்கும். இதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் பின்வரும் தளங்களைப் பார்வையிடலாம்: டிஜிட்டல் அட்வெர்டைசிங் அலையன்ஸ்; இன்டராக்ட்டிவ் டிஜிட்டல் அட்வெர்டைசிங் அலையன்ஸ்; ஆப்சாய்சஸ் (ஆப்கள் மட்டும்).

விலகுவது என்பது நீங்கள் விளம்பரத்தைப் பார்க்க மாட்டீர்கள் என்று அர்த்தமல்ல - விலகல் திட்டங்களில் பங்கேற்கும் நிறுவனங்களின் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை நீங்கள் பார்க்க மாட்டீர்கள் என்று அர்த்தம். மேலும், நீங்கள் விலகிய பிறகு உங்கள் டிவைஸில் உள்ள குக்கீஸ்-ஐ நீக்கினால், நீங்கள் மீண்டும் விலக வேண்டும்.

கூகுள் குக்கீஸ்

கூகுள் மாப்ஸ் ஏ.பி.ஐ குக்கீஸ்

கூகுள் மாப்ஸ் ஏ.பி.ஐ குக்கீஸ்
எங்கள் வலைத்தளத்தின் சில அம்சங்கள் மற்றும் சில டின்டெர் சேவைகள் கூகுள் மாப்ஸ் ஏ.பி.ஐ குக்கீஸ்-இன் பயன்பாட்டை சார்ந்துள்ளது. அத்தகைய குக்கீஸ் உங்கள் டிவைசில் சேமிக்கப்படும்.

இந்த இணையதளத்தை பிரவுசிங் செய்யும்போது மற்றும் கூகுள் மாப்ஸ் ஏ.பி.ஐ குக்கீகளை நம்பியிருக்கும் சேவைகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் டிவைஸில் அத்தகைய குக்கீகளை சேமிப்பது, சேகரிப்பது மற்றும் அதன் மூலம் சேகரிக்கப்பட்ட டேட்டாவை கூகுள் மூலம் அணுகல், பயன்பாடு மற்றும் பகிர்தல் ஆகியவற்றுக்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

கூகுள்™ உங்கள் புரவுஸரால் வழங்கப்பட்ட இடைமுகத்தின் மூலம் கூகுள்™ மாப்ஸ் ஏ.பி.ஐ குக்கீகள் தொடர்பான தகவல் மற்றும் உங்கள் தேர்வுகளைக் கையாள்கிறது. மேலும் தகவலுக்கு, குக்கீகளை கூகுள் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பார்க்கவும்.

கூகுள் அனாலட்டிக்ஸ்

நாங்கள் கூகுள் அனாலட்டிக்ஸ்-ஐ பயன்படுத்துகிறோம், இது இணையதள போக்குகளைப் புகாரளிக்கும் வகையில் உங்கள் இணையதள பயன்பாடு மற்றும் சேவைகளைப் பற்றிய உங்கள் தகவலைச் சேகரிக்கும் பிற டேட்டா சேகரிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் குக்கீஸ்-ஐப் பயன்படுத்தும் ஒரு கூகுள் சேவையாகும்.

கூகுள் எவ்வாறு தரவை சேகரித்து செயலாக்குகிறது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, கூகுளின் தனியுரிமை மற்றும் விதிமுறைகள் பக்கத்தைப் பார்க்கவும். கூகுள் அனலிடிக்ஸ் ஆப்ட்-அவுட் புரவுஸர் ஆட்-ஆன் ஐ பதிவிறக்கம் செய்வதன் மூலம் கூகுள் அனலிடிக்ஸில் இருந்து விலகலாம் மற்றும் கூகுள் விளம்பரத் தனிப்பயனாக்கத்திலிருந்து விலகலாம்.

எங்களை எப்படி தொடர்பு கொள்வது?

இந்த குக்கீ கொள்கை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், உதவிக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க ஆன்லைனில் எங்களைத் தொடர்புகொள்ளலாம்:

நீங்கள் ஐரோப்பிய பொருளாதார பகுதி, யுனைடெட் கிங்டம் அல்லது சுவிட்சர்லாந்தில் வசிக்கிறீர்கள் என்றால்:

தபால் மூலம்:

டேட்டா பாதுகாப்பு அதிகாரி

MTCH டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட்

டின்டெர்

1 ஹாட்ச் ஸ்ட்ரீட் அப்பர்

டப்ளின் 2

டப்ளின்

D02 PY28

அயர்லாந்து

நீங்கள் ஜப்பானில் வசிக்கிறீர்கள் என்றால்:

தபால் மூலம்:

டேட்டா பாதுகாப்பு அதிகாரி

எம்.ஜி ஜப்பான் சர்வீசஸ் ஜி.கே

c/o மேட்ச் குரூப், எல்.எல்.சி

8750 நார்த் சென்ட்ரல் எக்ஸ்பிரெஸ்வே

சூட் 1400

டாலஸ், TX 75231

அமெரிக்கா

நீங்கள் ஐரோப்பிய பொருளாதார பகுதி, யுனைடெட் கிங்டம், சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பானுக்கு வெளியே வசிக்கிறீர்கள் என்றால்:

தபால் மூலம்:

டேட்டா பாதுகாப்பு அதிகாரி

மேட்ச் குரூப், எல்.எல்.சி

8750 நார்த் சென்ட்ரல் எக்ஸ்பிரெஸ்வே

சூட் 1400

டாலஸ், TX 75231

அமெரிக்கா

ஏதேனும் கேள்விகள் உள்ளதா? அனைவரிடமும் குறைந்தபட்சம் ஒன்று இருக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்வையிடவும்

நீங்கள் போதுமான அளவு படித்துவிட்டீர்கள். சென்று தேடுங்கள்.

டின்டெரை டவுன்லோட் செய்

நீங்கள் போதுமான அளவு படித்துவிட்டீர்கள். சென்று தேடுங்கள்.

டின்டெரை டவுன்லோட் செய்