நுகர்வோர் சுகாதாரத் தரவுத் தனியுரிமைக் கொள்கை
இந்த நுகர்வோர் சுகாதாரத் தரவுத் தனியுரிமைக் கொள்கை எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பூர்த்தி செய்கிறது, மேலும் இது வாஷிங்டன் மற்றும் நெவாடாவில் வசிப்பவர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் சுகாதாரத் தரவைச் சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதல்
"நுகர்வோர் சுகாதாரத் தரவைச்" சேகரிப்போம் என்று நாங்கள் கருதவில்லை, மேலும் உங்கள் கடந்த கால, நிகழ்கால அல்லது எதிர்கால உடல் அல்லது மன ஆரோக்கிய நிலையைக் கண்டறிவதற்காக அல்லது தீர்மானிப்பதற்காக நாங்கள் சேகரிக்கும் தரவைப் பயன்படுத்த மாட்டோம். "நுகர்வோர் சுகாதாரத் தரவு" என்பது சில அதிகார வரம்புகளில் மிகப் பரந்த அளவில் விவரிக்கப்பட்டுள்ளதால், அவ்வப்போது உங்களிடமிருந்து அல்லது உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தகவலானது அந்த அதிகார வரம்புகளில் உள்ள சட்டங்களின் கீழ் "நுகர்வோர் சுகாதாரத் தரவு" என்று கருதப்படலாம். நாங்கள் சேகரிக்கும் பிற தரவுகளைப் போலவே, இந்தத் தகவல்களைப் பயன்படுத்துவதற்கான முக்கியக் காரணம் எங்கள் சேவையை உங்களுக்கு வழங்குவதற்கும், மற்ற உறுப்பினர்களுடன் உங்களை இணைக்க உதவுவதற்குமேயாகும்.
நுகர்வோர் சுகாதாரத் தரவை நாங்கள் எவ்வாறு வெளிப்படுத்துவோம்
மேலே விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்குத் தேவைப்படும்போது, நுகர்வோர் சுகாதாரத் தரவைப் பின்வரும் மூன்றாம் தரப்பினருடன் நாங்கள் பகிர்ந்து கொள்வோம்:
பிற யூசர்கள். மற்றவர்கள் பார்க்கும்படியாக சேவையில் உள்ள தகவல்களை (எ.கா. உங்கள் பொது ப்ரொஃபைல்) நீங்கள் தானாக முன்வந்து வெளிப்படுத்தும்போது, நீங்கள் யூசர்களுடன் தகவல்களைப் பகிர்ந்துொள்கிறீர்கள்.
சேவை வழங்குபவர்கள். எங்கள் சேவையை செயல்படுத்த எங்களுக்கு உதவும் விற்பனையாளர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம். தரவுச் சேமிப்பு மற்றும் பராமரிப்பு, வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகள் போன்ற சேவைகளை அவர்கள் எங்களுக்கு வழங்குகின்றனர்.
துணை நிறுவனங்கள். சேவை வழங்குபவர்களாக, தரவுச் செயலாக்க நடவடிக்கைகளில் எங்களுக்கு உதவும் துணை நிறுவனங்களுடன் நாங்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறோம். தரவுச் சேமிப்பு மற்றும் பராமரிப்பு, வாடிக்கையாளர் பராமரிப்பு, தரவுப் பாதுகாப்பு மற்றும் ஸ்பேம், துஷ்பிரயோகம், மோசடி மற்றும் பிற தவறுகளுக்கு எதிராகப் போராடுதல் போன்ற செயலாக்க நடவடிக்கைகள் இந்த உதவியில் அடங்கும்.
கார்ப்பரேட் பரிவர்த்தனைக்கான தரப்பினர்கள். இணைத்தல், விற்பனை, விலைக்கு வாங்குதல், விலகல், மறுசீரமைப்பு, மறுமுறை திருத்தி அமைத்தல், கலைப்பு, திவால் அல்லது உடைமை அல்லது கட்டுப்பாட்டின் பிற மாற்றங்களில் நாங்கள் முழுமையாகவோ பகுதியாகவோ ஈடுபட்டிருந்தால், உங்கள் தகவலை நாங்கள் மாற்றலாம்.
சட்ட அமலாக்க அதிகாரிகள் / சட்டச் செயல்முறைகள். உங்கள் தரவை நாங்கள் இவர்களுக்கெல்லாம் வெளிப்படுத்துவோம்: (i) நீதிமன்ற உத்தரவு, அழைப்பாணை அல்லது தேடுதல் வாரண்ட், அரசு / சட்ட அமலாக்க விசாரணை அல்லது பிற சட்டத் தேவைகள் போன்ற ஒரு சட்டச் செயல்முறைக்கு இணங்குதல்; (ii) குற்றத்தைத் தடுப்பதில் அல்லது கண்டறிவதில் உதவுதல்; (iii) எந்தவொரு நபரின் பாதுகாப்பையும் பாதுகாத்தல்; மற்றும் (iv) சட்ட உரிமைகோரல்களை நிறுவுதல், செயல்படுத்துதல் அல்லது பாதுகாத்தல்.
உங்கள் உரிமைகள்
பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் எங்கள் வாடிக்கையாளர் பராமரிப்புக் குழுவிடம் கோரிக்கையை இங்கே சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் தனியுரிமை உரிமைகளைப் பயன்படுத்தலாம்.