டின்டெர் என்றால் என்ன?
டின்டெர் 2012 ஆம் ஆண்டு ஒரு கல்லூரி வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் புதிய நபர்களை சந்திப்பதற்கான உலகின் மிகவும் பிரபலமான செயலியாகும். இது 340 மில்லியன் முறைக்கும் அதிகமாக பதிவிறக்கப்பட்டுள்ளது, மற்றும் 190 நாடுகளில் 40+ மொழிகளில் கிடைக்கிறது. டின்டெர் உலகின் சாத்தியங்களால் உருவாக்கப்பட்ட ஒரு இடமாகும். இணைப்புகளால் உருவாகும் சாத்தியங்கள் இன்னும் பலவற்றுக்கு வழிகோலக்கூடும். புதிய நபர்களைச் சந்திக்க, உங்கள் சமூக வலையமைப்பை விரிவுபடுத்த, நீங்கள் வெளியூர்களுக்குப் பயணிக்கையில் அப்பகுதிவாசிகளைச் சந்திக்க அல்லது உங்கள் வாழ்வின் இத்தருணத்தை மகிழ்ச்சியோடு அனுபவித்து மகிழ நீங்கள் இங்கு வந்திருந்தால், நீங்கள் சரியான இடத்துக்குதான் வந்துள்ளீர்கள். டின்டெர் மிகவும் எளியது மற்றும் கேளிக்கை நிறைந்தது - யாரேனும் ஒருவரை லைக் செய்ய வலதுபுறம் ஸ்வைப் செய்யவும், அவர் உங்களைத் திரும்ப லைக் செய்தால் அதுவொரு இணையாகும்! நீங்கள் சந்திக்க ஆர்வமாக உள்ள நபர்கள் மீது டேப் செய்து ஏதேனும் புதிய தூண்டுதலை உருவாக்கிடுங்கள்.