ஸ்வைப் நைட் எப்படி வேலை செய்கிறது

நவம்பர் 7ஆம் தேதியிலிருந்து, டின்டெர் எக்ஸ்ப்ளோரின் ஸ்வைப் நைட் நிகழ்வில் பங்குபெற நீங்கள் அழைக்கப்படுவீர்கள். உங்கள் ஆப்பின் வழிகண்டறிதல் அம்சத்தில் உள்ள எக்ஸ்ப்ளோர் டேப் மூலம் இந்த அனுபவத்தைப் பெறலாம். ஒவ்வொரு ஸ்வைப் நைட் எபிசோடும் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் மற்றும் பிற டின்டெர் உறுப்பினர்களுடன் பிரத்தியேகமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் 12 மணி வரை அனுபவிப்பீர்கள்.
ஒவ்வொரு எபிசோடிற்கு பிறகு, ஸ்வைப் நைட்டில் பங்கேற்ற மற்ற வீரர்களுடன் நீங்கள் இணையலாம் மற்றும் அவர்களின் விருப்பங்களை பார்க்கலாம். மர்மத்தை தீர்க்க படைகளில் சேருங்கள்!

ஃபாஸ்ட் சாட்

ஞாயிறு இரவுகளில் ஒவ்வொரு எபிசோடும் முடிந்தவுடன், நீங்கள் தானாகவே ஃபாஸ்ட் சாட்டில் அனுப்பப்படுவீர்கள் - உங்கள் முக்கிய சந்தேக நபர்கள் மற்றும் கதையின் பிற தடயங்களைப் பற்றி மற்ற வீரர்களுடன் நீங்கள் அரட்டை அடிக்கக்கூடிய ஒரு பிரத்யேக செய்தி இடம். இது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் காலை 12 மணி வரை மட்டுமே எக்ஸ்ப்ளோரில் கிடைக்கும்

ஸ்வைப் நைட் இணை அடுக்கு

ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் ஃபாஸ்ட் சாட்டிலிருந்து வெளியேறிய பிறகு, ஸ்வைப் நைட் மேட்ச் ஸ்டாக் என்னும் ஸ்வைப் நைட் விளையாடிய மற்ற டின்டெர் பயனர்களின் இணைக்கப்பட்ட பரிந்துரைகளின் தொகுப்பிற்கு நீங்கள் இயக்கப்படுவீர்கள். அவர்களின் விருப்பங்களைக் காண அவர்களின் சுயவிவரங்களைத் திறந்து, முன்னிலைப்படுத்தப்பட்ட தேர்வுகளில் உங்களுக்கு பொதுவானதாக இருப்பதை உன்னிப்பாக கவனம் செலுத்துங்கள்.

நேர்க்காட்சியுணர்வு

மிகவும் நேர்க்காட்சியுணர்வுடன் வீடியோ அனுபவத்தை உருவாக்க, அறிவிப்புகள் மற்றும் அதிர்வுகள் போன்ற சில மொபைல் சார்ந்த கூறுகளை கதையின் ஒரு பகுதியாக வழங்கியுள்ளோம். நீங்கள் காணும் அறிவிப்புகள் கதை சொல்லும் நோக்கத்திற்காக மட்டுமே; அவை நிஜமில்லை.

வீடியோ கட்டுப்பாடுகள்

நீங்கள் வீடியோவை இடையில் நிறுத்த விரும்பினால், உங்கள் திரையில் தேர்வு இல்லாதபோது வீடியோவை ஒரு முறை தட்டவும். அங்கிருந்து, நீங்கள் மூடப்பட்ட வசனங்களை இயக்கலாம் (உங்கள் திரையின் கீழ் உள்ள ஐகான் மூலமாக) அல்லது அனுபவத்திலிருந்து வெளியேறலாம். நீங்கள் வெளியேறினால், எபிசோடைத் தட்டி நீங்கள் எக்ஸ்ப்ளோர் பகுதிக்குத் திரும்பலாம் மற்றும் கதையை எங்கு நிறுத்தினீர்களோ அங்கிருந்து கதை தொடங்கும்.

ரீப்ளேஸ்

ஒரு எபிசோட் முடிவதற்குள் நீங்கள் அதன் இயக்கத்தை நிறுத்தலாம் என்றாலும், நீங்கள் எடுக்கும் முதல் தேர்வுகள் தான் உங்களின் இணைகளைத் தீர்மானிக்கும்.
டின்டெருக்கு வாருங்கள்